பல்வேறு கீரைகளில் உள்ள சத்துக்களும் பயன்களும்...!!

Webdunia
கீரை வகைகள் அனைத்திலும் சத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம்.
 
கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் `சி' போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும். கீரைகள் `பி காம்ப்ளக்ஸ்'  வைட்டமின்களையும் கொண்டுள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கீரையை மனிதர்கள் தினமும் உட்கொள்வது நல்லது.
 
அரை கீரையில் இந்த எல்லா சத்துக்களும் அதிகளவில் நிறைந்திருக்கின்றன. எனவே அரை கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர்,  கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் அடிக்கடி சாப்பிடுவது அவர்களின் உடல்நலத்திற்கு மிகவும் உகந்தது.
 
அரைக்கீரையில் உணவில் சேர்த்து வர வாயுக் கோளாறுகள், வாத வலி நீங்கும். இக்கீரை விதைகளை எண்ணெயிலிட்டு காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்து வர  தலைமுடி நன்கு வளரும். 
 
அல்சர்: அகத்தி கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும். இதற்கு அகத்திக்கீரையை நன்றாக கழுவி இதில் 4 பங்கு சின்ன வெங்காயத்தை  சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினமும் 1 வேளை குடிக்கலாம்.
 
முருங்கை கீரை கசப்பு தன்மை கொண்டது. முருங்கைக் கீரை சத்தான உணவு. முருங்கை கீரையில் வைட்டமின் ஏ,பி,சி புரதம், இரும்புச் சத்து போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
 
பாலக்கீரையை சாப்பிடுவதால் புற்றுநோய் வராது. இதில் புரத சத்து அதிகமாக இருப்பதால் மாரடைப்பு, ரத்த குழாய் அடைப்பு மற்றும் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுத்து நிறுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்