தேனின் மருத்துவ குணங்களும் அவற்றின் அற்புத பலன்களும் !!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (18:21 IST)
கிரீன் டீயில் சிறிதளவு தேன் கலந்து தினமும் பருகி வருபவர்களுக்கு பொடுகு தொல்லை கூடிய விரைவில் நீங்கும். தலைமுடியின் பளபளப்பு தன்மையும் அதிகரிக்கும்.


ஒருவர் இரவில் தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட்டால் சர்க்கரை நோயாளின் அபாயதைக் குறைக்குமாம். அதிலும் உங்களுக்கு ஏற்னவே சர்க்கரை நோய் இருந்தால், தினமும் ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட வேண்டும். இது சர்க்கரை நோயை சரிசெய்ய உதவும்.

ஒருவர் தினமும் ஒரு டீஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உட்பொருட்கள், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக ஆய்வில் தெரிய வந்தது. எனவே உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தினமும் ஒரு டீஸ்பூன் தேனை தவறாமல் சாப்பிட்டு வாருங்கள்.

தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும். பெரும் சீரக பொடியுடன் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.

தேன் மற்றும் இஞ்சி சாறு சமஅளவு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
ஆஸ்துமா குணமாகும் :

அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சமஅளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும். ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.
இரத்த சுத்திகரிப்பு:

ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்