ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் மருத்துவ குணம் கொண்ட வேப்பம் பூ !!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (15:02 IST)
வேப்ப மரத்தின் விதைகள், பட்டை மற்றும் இலைகள், பூ என அனைத்து பாகங்களும் நிரூபிக்கப்பட்ட ஆண்டிசெப்டிக், ஆன்டிவைரல், ஆண்டிபிரைடிக், அழற்சி எதிர்ப்பு, அல்சர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.


காய்ந்த வேப்ப மரத்தின் பூவை பொதுவாக தென்னிந்தியாவில் ரசம், வேம்புப் பூ சாதம், பச்சடி, உலர்ந்த வேப்பம்பூ சூப், பருப்பு போன்ற பல்வேறு உணவு பொருட்களுடன் சேர்த்து சமைக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

உலர்ந்த வேப்பம்பூ பொடி கறிவேப்பிலை பொடிக்கு மிகவும் ஒத்து காணப்படும். வேப்ப மரத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் காரணமாக, இந்த மரத்தின் அனைத்து பகுதிகளும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

தொழுநோய், கண் கோளாறுகள், மூக்கில் இரத்தம் வருதல், குடல் புழுக்கள், வயிற்றுக் கோளாறுகள், பசியின்மை, தோல் புண்கள், இதயம் மற்றும் இரத்த நாளங்களின் நோய்கள், காய்ச்சல், நீரிழிவு, ஈறு நோய் போன்ற உடல் நலக் கோளாறுகளுக்கு வேப்ப இலை மருந்தாகச் செயல்படுகிறது.

வேப்ப இலைகளைப் போல் வேப்பம்பூ ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. பொடுகு மற்றும் அரிப்பு போன்றவற்றிற்கு உலர்ந்த வேப்பம் பூ மருந்தாக பயன்படுகிறது. உலர்ந்த வேப்பம் பூக்கள் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகின்றன. மசாஜ் எண்ணெய்கள், கிரீம்கள் உட்பட பல்வேறு அழகுசாதனப் பொருட்கள் இந்த பூவை பயன்படுத்தி தயாரிக்கலாம்.

வேப்பம் பூ பொடி சருமத்தின் எண்ணெய் பசையை அதிகரிக்காமல் வரட்சியை நீக்கி ஈரப்பதமாக வைத்திருக உதவுகிறது. வாயுத்தொல்லை, ஏப்பம் தொல்லை, பசியின்மை போன்ற கோளாறுகளுக்கு இந்த பூக்களை நன்றாக மென்று உண்டால் குணம் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்