கோதுமை மாவில் வைட்டமின் பி 9 உள்ளது. கர்ப்ப காலத்தில் இது மிகவும் முக்கியமானது. கோதுமையின் பல சத்தான பகுதிகள் அவை சுத்திகரிப்பு செய்யப்படும் போது நீக்கப் படுகின்றன. எனவே, முழு தானிய கோதுமையுடன் ஒப்பிடும்போது வெள்ளை கோதுமையில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைந்த அளவே உள்ளன.
வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம. கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும். கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.