ஓரிதழ் தாமரையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம் !!

Webdunia
ஓரிதழ் தாமரையில், அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால் ரத்த சோகையை குணப்படுத்துகிறது.

ஓரிதழ் தாமரை சமூலத்தில் கஷாயம் அருந்தி வர உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. அலர்ஜியை போக்குகிறது. உடல் வலியை, அசதியை நீக்கவும் பயன்படுகிறது. இதற்கு காரணம், ஓரிதழ் தாமரையில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளதுதான்.
 
ரத்தத்தில் சர்க்கரையின் அளவே குறைக்கிறது. ஆனால், நீரிழிவு நோயாளிகள் ஓரிதழ் தாமரையை மத்த நீரழிவு மருந்துகளுடன் பயன்படுத்த அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் குறைத்து விடுகிறது.
 
கர்ப்பமாக உள்ள பெண்கள் கண்டிப்பாக ஓரிதழ் தாமரை சமூலம் கஷாயம், மற்றும் பொடி எவ்வகையிலும் பயன்படுத்த கூடாது மீறினால் கருவானது களைந்துவிட வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக இதனை பயன்படுத்த, ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறிப்பிடத்தக்க அளவு குறைகிறது.
 
ஓரிதழ் தாமரை, தூக்கமின்மை நோயை குணப்படுத்துகிறது. இரவு, பகல் இன்று நேரம் காலம் பார்க்காமல் பணிபுரிப்பவர்கள் படிப்பில் மும்முரமாக இருந்து, தூக்கத்தை கெடுப்பவர்கள், தங்கள் உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.
 
நேரத்திற்கு உணவு உட்கொள்ளாமல் இருப்பதாலும், அவர்கள் சரியான தூக்கம் பெறாமல் அவதிப்படுகிறார்கள். இத்தகைய பாதிப்புகளில் இருந்து குணம் பெற ஓரிதழ் சமூலத்தை நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்து, பால் சேர்த்து கலந்து காலை, மால என தினசரி இருவேளை அருந்தி வர வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்