பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் மினரல்களை கொண்டுள்ள வெண்டைக்காய் !!

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (12:14 IST)
சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரைகளை மிகுதியாக சாப்பிட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்ற சூழலில், வெண்டைக்காய் சாப்பிட்டால் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.


சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் வெண்டைக்காய் சூப் அருந்துவதன் மூலமாக சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும்.

வெண்டைக்காயில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் மினரல்கள் நிரம்பியுள்ளன. அவை ஃபோலேட், விட்டமின் பி6 மற்றும் நார்ச்சத்து ஆகும். வெண்டைக்காயில் உள்ள விட்டமின் பி என்பது சர்க்கரை நோய் உண்டாக காரணமான ஹோமோசிஸ்டெய்ன் அளவுகளை குறைக்கிறது.

வெண்டைக்காய் குறைவான கிளைசமிக் இண்டெக்ஸ் கொண்ட காய்கறி ஆகும். குறைவான கிளைசமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவுப் பொருள் நம் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.

வெண்டைக்காயில் கரையும் நார்ச்சத்து மற்றும் கரையா நார்ச்சத்து ஆகியவை மிகுதியாக உள்ளன. நாம் சாப்பிட்ட பிறகு, இந்த நார்ச்சத்து நீண்ட நேரத்திற்கு பிறகு உடையத் தொடங்குவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு மெதுவாக கலக்கும். இதனால், நமது ரத்த சர்க்கரை அளவு சட்டென்று உயர்ந்து விடாமல் சீரான அளவில் இருக்கும்.

நார்ச்சத்து மிகுந்த உணவை எடுத்துக் கொள்ளும்போது, வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும் மற்றும் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. இதனால் கூடுதலான உணவு மற்றும் ஸ்நாக்ஸ்களை தவிர்க்க முடியும். மேலும் உடல் பருமன் பிரச்சினையை கட்டுப்படுத்த முடியும் என்பதோடு, சர்க்கரையை குறைக்கும் இன்சுலின் சுரப்பு சீரான அளவில் இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்