ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு உதவும் கம்பு !!

Webdunia
கம்பு உணவுகளில் அதிக அளவு புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உங்கள் உடலிற்கு வலுவளித்து ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றது.

கம்பில் மிகவும் அதிக அளவில் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வரும்பொழுது உங்களுக்கு இரத்தசோகை மற்றும் முடி கொட்டுதல் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.
 
கம்பங்கூழில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் உள்ள  தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உங்கள் உடல் எடை குறையும்.
 
கம்பில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.
 
கம்பில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளதால் இதனை உண்ணும்பொழுது உங்களுக்கு சர்க்கரை னாய் ஏற்படாமல் காக்க உதவும்.
 
காம்பில் அதிக அளவு நார்சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வரும்பொழுது உங்களுக்கு மலசிக்கல் போன்ற பிரச்சினை வராமல் முற்றிலுமாக  தடுக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்