மணத்தக்காளி கீரையின் முக்கியமான மருத்துவ குணங்கள் !!

Webdunia
கீரைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் மணத்தக்காளி கீரை. இந்த கீரையின் தண்டு, இலை, காய், பழம் போன்ற அனைத்துமே சமையலில் மட்டுமின்றி, மருத்துவத்திலும் பயன்படுகிறது.

வாய்ப்புண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும். ஏனெனில் வாய்ப்புண்  உள்ளவர்களுக்கு வயிற்றுப்புண்ணும் இருக்கும்.
 
மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால், இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
 
தொண்டை கரகரப்பு உள்ளவர்களுக்கு இந்த கீரை விரைவில் நிவாரணம் அளிக்கும். எனவே வாரம் இரண்டு முறை இந்த கீரையை உணவில் சேர்த்து வந்தால், தொண்டை கரகரப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
 
செரிமான பிரச்சனை உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், செரிமான பிரச்சனையும்  நீங்கிவிடும்.
 
உடல் வெப்பம் அதிகம் இருந்தால், மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டு வர, உடல் வெப்பம் தணியும். காசநோய் உள்ளவர்கள் இந்த கீரையின் பழத்தை  தினமும் சாப்பிடுவது நல்லது.
 
காய்ச்சல் வந்தால், கை கால் போன்றவை வலி எடுக்கும். இத்தகைய வலியையும், காய்ச்சலையும் போக்க இந்த கீரையை சாப்பிடுவது சிறந்தது.
 
சருமத்தில் அலர்ஜி, வெயில் கட்டி போன்றவை இருந்தால், அப்போது மணத்தக்காளியின் சாற்றினை பிரச்சனை உள்ள இடத்தில் தடவினால், விரைவில்  குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்