செவ்வாழை பழத்தில் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த பழத்தில் அதிகளவு நார்சத்து உள்ளதால் மலசிக்கல் வராமல் தடுப்பதுடன், செரிமான கோளாறுகளையும் போக்குகிறது.
செவ்வாழையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, அதனால் தினம் ஒரு செவ்வாழைப்பழம் இரவு உணவிற்கு பின் ஒரு மணிநேரம் கழித்து சாப்பிட்டு வர செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, மலச்சிக்கல், வாயு தொல்லை வராமல் தடுக்கலாம்.