உடல் நலத்தை காக்கும் செம்பருத்தி பூ; எப்படி தெரியுமா...?

Webdunia
தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள  அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.
 
உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக  இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
 
சிலருக்கு இளநரை, பொடுகு தொல்லை, முடி உதிரும் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். செம்பருத்திப்பூ இலைகளுடன் கருவேப்பிள்ளை, மருதாணி இலை இவற்றை சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து பின்பு குளிக்க வேண்டும். இதேபோன்று வாரத்திற்கு இரண்டு முறை செய்துவந்தால் தலைமுடி பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
 
செம்பருத்திப் பூவின் கஷாயமானது நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு உதவுகிறது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது.
 
நம் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க 2, 3 செம்பருத்திப் பூக்களை நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு டம்ளர் அளவு நீரில், ஒரு ஸ்பூன் தேன்  கலந்து குடித்து வந்தால் ரத்த சோகை நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்