நோய்களை குணமாக்க உதவும் சில சிம்பிள் வீட்டு வைத்திய குறிப்புக்கள் !!

Webdunia
தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸைக் குடிப்பதால், குறைவான இரத்த அழுத்த பிரச்சனை சரியாகி, இதயமும் ஆரோக்கியமாக செயல்படும்.

சிறிது துளசி இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள். இது சிறந்த ஆன்டாசிட்டாக மட்டும் செயல்படாமல், உண்ட உணவில் உள்ள சத்துக்கள் எளிதில் உடலால் உறிஞ்சப்பட்டு, அல்சர் வருவது தடுக்கப்படும்.
 
அசிடிட்டி பிரச்சனைக்கான சிறப்பான கை வைத்தியம், உணவு உண்ட பின் ஒரு துண்டு கிராம்பை வாயில் போட்டு சிறிது நேரம் வைத்து, அதன் சாற்றினை விழுங்குங்கள்.
 
வயிற்று பிரச்சனைகளால் கஷ்டப்படுபவர்கள், தினமும் காலையில் ஒரு துண்டு பூண்டு எடுத்து வாயில் போட்டு மென்று விழுங்கி, ஒரு டம்ளர் நீரைக் குடிக்க, வயிறு சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் சரியாகும்.
 
ஒற்றைத் தலைவலியால் கஷ்டப்படுபவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிளை சாப்பிட விடுபடலாம். அதுவும் சில நாட்கள் இம்மாதிரி சாப்பிட்டால், ஒற்றை தலைவலியில் இருந்து முற்றிலும் விடுபட வாய்ப்புள்ளது.
 
6 பேரிச்சம்பழத்தை 1/2 லிட்டர் பாலில் போட்டு, குறைவான தீயில் 25 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, தினமும் மூன்று கப் குடித்து வர, வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்.
 
2 டீஸ்பூன் இஞ்சி சாறுடன் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடித்து வர, உடலில் உள்ள சளி உருகி வெளியேற உதவுவதோடு, இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புண் போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.
 
நாள்பட்ட மலச்சிக்கல் அல்லது செரிமான பிரச்சனையை சந்திப்பவர்கள், காலை உணவு உண்பதற்கு முன் 1/2 கப் வேக வைத்த பீட்ரூட்டை சாப்பிட, இப்பிரச்சனை முற்றிலும் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்