வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள கொய்யா பழம் !!

Webdunia
கொய்யா பழம் ரத்தத்தில் அதிகம் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. ரத்தம் அதிகம் கெட்டியாகாமல் அதன் நீர்ம தன்மையை பாதுகாக்கும் சக்தியும் கொய்யா பழத்திற்கு உண்டு. 

இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் இருக்கும் ரத்தத்தில் நச்சுக்களை அனைத்தும் நீங்கி ரத்தம் சுத்தமாகிறது. ரத்ததின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.
 
கொய்யா பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது.
 
கொய்யா பழம் நார்ச்சத்து அதிகம் கொண்ட ஒரு பழமாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்து ஒரு இயற்கை மருத்துவ உணவாக இருக்கிறது. 
 
தினந்தோறும் காலை அல்லது மதியத்தில் ஒரு கொய்யா பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் பிரச்னையை விரைவில் தீர்க்கும். அல்சர், குடல்களில் ஏற்படும் புண்களையும் ஆற்றும் தன்மை கொண்டது கொய்யா பழம்.
 
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்புகள் நிறைந்த உணவுகள் தவிர்த்து, முறையான உடற்பயிற்சிகளை செய்வதுடன் கொய்யா பழத்தையும் அவ்வப்போது உண்பதால், அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கிறது. உடலில் கொழுப்புகள் சேராமல் தட்டுப்பதால் உடல் எடையையும் குறைக்க முடிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்