கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறதா பாதாம் !!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (10:29 IST)
வைட்டமின் E சத்து அதிகம் நிரம்பியுள்ள ஒரு அற்புதமான உணவுப் பொருளாக பாதாம் பருப்பு திகழ்கிறது. இது  கேன்சர், இதய நோய், அல்சைமர் போன்ற பிரச்சனைகள் நம் உடலை நெருங்காமல் தடுத்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது. வைட்டமின் E கண்களின் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுகிறது. எனவே கண்களில் ஆரோக்கியத்தையும், பார்வைத் திறனையும் மேம்படுத்த பாதாம் சாப்பிடலாம்.


பாதாம் பருப்பில் அதிக அளவில் புரோட்டீன் மற்றும் பைபர் ஆகிய சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது உங்களுக்கு அதிக பசி உணர்வு ஏற்படுவதை தடுக்கிறது. இதன் காரணமாக குறைந்த அளவு கேலரி கொண்ட உணவுகளையே நீங்கள் சாப்பிடுவீர்கள். இது உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.

பாதாம் பருப்பில் 50 சதவீதம் கொழுப்பு நிரம்பியுள்ளது. பாதாமில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புச் சத்து தான் அதிக அளவில் உள்ளது. தேவையில்லாத கெட்ட கொழுப்பை உடலில் குறைப்பதற்கும் பாதாம் உதவுகிறது. எனவே மிகவும் மெலிந்த உடல் தேகம் உடையவர்கள், உடல் எடையை சற்று அதிகரிக்க பாதாம் சாப்பிடலாம். மேலும் கெட்ட கொழுப்பு குறைவதனால், அதிக உடல் எடை உடையவர்கள் உடல் எடையை குறைப்பதற்கும் பாதாம் சாப்பிடலாம்.

பாதாம் பருப்பில் உள்ள பிலேவனாய்டு சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே சருமத்தை எப்போதும் பொலிவுடனும், இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்திருக்க பாதாம் நிச்சயம் உதவும். உடலில் உணவு செரிமானத்தை சீராக நடைபெற செய்ய பாதாம் பருப்பு உதவுகிறது. எனவே உடலில் சீராக செரிமானம் நடைபெற உணவு சாப்பிட்ட பிறகு பாதாம் சாப்பிடலாம்.

மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பாதாம் உதவுகிறது. பாதாம் சாப்பிடுவது உங்கள் புத்தி கூர்மையையும், அறிவுத் திறனையும் அதிகரிக்க செய்யும். பாதாம் பருப்பில் உள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க பாதாம் பெரிதும் உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்