கீழாநெல்லி வேரை அரைத்து பசும்பாலுடன் கலந்து, காலை, மாலை 3 நாட்கள் கொடுக்க உடல் சூடு குறைந்து குளிர்ச்சி பெறும். கீழாநெல்லி தோசையை வாரம் இரண்டு முறை சாப்பிட்டால் உடலில் இயற்கையாகவே நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும்.
* தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.
* தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளைக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
* கீழாநெல்லி கல்லீரலை பாதுகாக்கும் தன்மையுடையது என பல்வேறு ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளனர். கல்லீரல் கோளாறுகளை மிக விரைவில் குணப்படுத்த கூடிய ஆற்றல் கொண்டுள்ளது.
* காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வந்தால் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். அத்துடன் கல்லீரலில் சேர்ந்துள்ள அசுத்தங்களை வெளியேற்ற கீழாநெல்லி உதவி புரிகிறது.
* மஞ்சள் காமாலையை குணப்படுத்த கீழாநெல்லியை தவிர வேறு இயற்கை மருந்து கிடையாது. கீழாநெல்லி, தும்பை இலை, கரிசலாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து காலை, மாலை சுமார் பத்து நாட்கள் உண்டு வந்தால் காமாலை நோய் பூரணமாக குணமாகும்.