வில்வத்தின் வேரை உலர்த்திப் பொடியாக்கி வைத்துக் கொண்டு வேண்டும்போது சிறிது நீர்விட்டு குழைத்து நெற்றிக்கு பற்றாகப் போட தலைவலி தணிந்துவிடும்.
வில்வ இலையை விழுதாக அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு உள்ளுக்கு சாப்பிட்டு விட்டு குளிர்ந்த நீரில் தலைக்கு குளித்துவர பெரும்பாடு என்னும் அதி ரத்தப் போக்கு குணமாகும்.
வில்வ இலை தளிரை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டுடன் ஒத்தடம் கொடுப்பதால் கண் சிவந்து காணுதல், கண்களில் அரிப்பு ஏற்படுதல், கண்வலி ஆகியன குணமாகும்.