சிவனின் ரூபமான பைரவரின் வழிபாட்டு பலன்கள் !!

சனி, 5 மார்ச் 2022 (12:53 IST)
பைரவர் சிவனின் ரூபமாக தோன்றியதால் அவர்களே சிவனாகவும், சிவ குமாரர்களாகவும் விளங்கி, துஷ்ட நிக்ரஹமும் பக்த பரிபாலனம் செய்கிறார்கள்.  


'சிவனே பைரவர்',  'பைரவரே சிவன்' என்றபோதும் இருவருக்குமான வழிபாடுகள், பூஜைமுறைகள், பலன்கள் எல்லாம் தனித்த னியானவை.

பயம் போக்கும் பைரவர் வழிபாடு நான்முகனாகக் காட்சிதரும் படைப்புக்கடவுள் பிரம்மனுக்கு முற்காலத்தில் ஐந்து தலைகள் இருந்தனவாம். அந்த ஐந்தாவது தலை மறைந்தது எப்படி என்று அறிந்து கொண்டால் பைரவ அவதாரம் குறித்தும் அறிந்து கொண்டு விடலாம்.

அந்தகாசுரன் என்னும் அரக்கன் மூவுலகையும் ஆட்டுவித்துவந்தான் அந்தகம் என்றால் இருள் தன் சக்தியால் பிரபஞ்சம் முழுமையையும் இருளாக்க, அஞ்சி நடுங்கிய தேவர்களும் முனிவர்களும் கயிலை யில் சரணடைந்தனர். அப்போது அவர்களுக்கு அபயம் அளித்த சிவன் தன் சக்தியாக பைரவரைப் படைத்தார். பைரவர் இந்த உலகின் ஒளியாகி எண் திசைகளிலும் நின்று ஒளிகொடுத்தார். அப்படி எண் திசைகளிலும் நின்று ஒளிகொடுத்து அந்தகாரத்தை அழித்தவர்களே 'அஷ்ட பைரவர்கள்' என்கிறார்கள்.

பிரம்மன் படைப்புத்தொழில் செய்வதாலும் ஐந்துதலைகளை கொண்டிருப்பதாலும் 'தானே பெரியவன்' என்னும் அகந்தை கொண் டாராம். அகந்தை கொண்டு அவர் எல்லோரையும் எள்ளி நகையாடினார். அப்போது பிரம்மனின் ஆணவத்தை அழிக்கும் படி சிவனடியார்கள் வேண்டிக் கொள்ள சிவன் தன் ரூபமான பைரவரைத் தோற்றுவித்தார்.

விஸ்வரூபம் கொண்ட பைரவர் தன் விரல் நகத்தினால் பிரம்மாவின் தலை ஒன்றினைக் கொய்தார். அகந்தை நீங்கி அயனும் பைரவரை வணங்கித் தன் பிழை பொறுக்குமாறு வேண்டினார்.

இருளையும் அகந்தையையும் அழிப்பவர் பைரவர் ஆதலால், இவற்றால் துன்பப்படுபவர்கள் பைரவ வழிபாடு செய்ய அவை அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல மறையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்