கம்பில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து எதற்கு உதவுகிறது தெரியுமா...?

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (10:36 IST)
100 கிராம் கம்பில் 300 கிலோ கலோரிகலும், இறைச்சி, முட்டை போன்ற அசைவ உணவுகளுக்கு இணையான அளவு புரதச் சத்தும், அதிக அளவு நார்ச் சத்தும், மிக குறைந்த அளவு கொழுப்புச் சத்தும் உள்ளன.


கம்பில் அதிக அளவு வைட்டமின்-பி மற்றும் இரும்புச் சத்து, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம் மற்றும் குரோமியம் போன்ற தாதுச் சத்துக்கள் நிறைந்துள்ளது.

கம்பில் 14 சதவீதம் புரதச்சத்து உள்ளது. கம்பு மிக அதிக அளவு  இரும்புச் சத்து கொண்டுள்ள உணவுகளில் ஒன்றாகும். இது பெண்களுக்கு அதிக அளவு இரும்புச்சத்தை வழங்குகிறது. இரும்புச்சத்து குறைபாடு பொதுவாக  சோர்வை ஏற்படுத்துகிறது. மற்றும் மன வளர்ச்சியையும் பாதிக்கிறது.

இரும்புச்சத்து நிறைந்த கம்பில் ஏராளமான அளவு துத்தநாகமும் உள்ளது. இது வளர்ச்சி மற்றும் வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு அவசியம் ஆகும்.

கம்பு நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வலு அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது.

கம்பில் மற்ற தானியங்களை போல் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. மேலும் பொதுவாக தானியங்கள் வயிற்றில் இருந்து சிறு குடல்களுக்கு வெளியே செல்ல அதிக நேரம் எடுக்கும்.

கம்பினால் சமைத்த உணவு நீண்ட காலத்திற்கு பசியைக் குறைத்து, குறைவான கலோரிகளை உட்கொள்வதற்கு வழிவகுக்கிறது, இதனால் எடை குறைய உதவுகிறது.

கம்பில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து செரிமான செயல்முறையை எளிதாக்குகிறது மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்