செரிமான பிரச்சனைகளை போக்கும் அற்புத மருத்துவகுணம் கொண்ட நாட்டு சர்க்கரை !!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (14:31 IST)
நாட்டு சர்க்கரையை நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் பயன்படுத்துவதால் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி ரத்தம் சுத்தமாகிறது.


நாட்டுச் சர்க்கரையில் வாதம் மற்றும் செரிமான நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது. நாட்டுச் சர்க்கரையில் விட்டமின் பி உள்ளது.

நாட்டுச் சர்க்கரையில் கலோரிகள் குறைவு என்பதால் இவை நமது உடல் எடை குறைக்க உதவுகிறது. எனவே நாட்டுச் சர்க்கரை பயன்படுத்துதல் நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.  

நாட்டு சர்க்கரையில் பலவிதமான நன்மைகள் உள்ளன. நாட்டு சர்க்கரை சேர்த்துக்கொள்வதால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும்.

தினசரி டீ, காஃபிக்குக் கூட நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தலாம். அஜீரணம், வயிற்றுக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு நாட்டுச்சர்க்கரை உதவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்