தலைமுடி உதிர்வதற்கான காரணங்களும் தடுக்கும் வழிமுறைகளும்...!

Webdunia
அடிக்கடி தண்ணீர் மாற்றி குளிப்பதினாலும் முடி உதிரலாம். தண்ணீரில் உள்ள உப்பின் காரணமாகவும் தலை முடி உதிரல் அதிகமாகலாம். உடலில் சரியான அளவு விட்டமின் இல்லாமையாலும் முடி உதிரலாம்.
தலை முடியை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் முடி உதிர்வத்தைத் தடுக்கலாம். தினமும் தலைக்கு குளித்து தலையை சுத்தமாக வைத்து கொள்ள  வேண்டும். 
 
தூக்கம் மனித உடலுக்கு மிகவும் அத்யாவசியமாகும். தூக்கம் குறையும் போது தலை முடி உதிர்கிறது. நாளொன்றுக்கு சராசரியாக எட்டு மணி நேரம் தூங்க  வேண்டும். இதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம்.
 
சோம்பினை நன்கு அரைத்துக் கொண்டு தலையில் வாரம் மூன்று முறை தேய்த்து வர முடி கொட்டுவது தடுக்கப்படும். தலையின் உச்சந்தலையில் இருந்து தலைமுடி நுனி வரை சீப்பை வைத்து சீவ வேண்டும். இம்முறை தலையில் இரத்த ஓட்டம் சீராக பாய்வதற்கு உதவுகிறது. 
 
பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் கண்டிப்பாக முடி உதிர்வதற்கு ஆளாவார்கள். பொடுகை போக்குவதன் மூலம் முடி கொட்டுவதில் இருந்து தப்பிக்கலாம். முடி கொட்டுவதை தடுக்க வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எளிமையாக முடி கொட்டுவதை தடுக்கலாம்.
 
கறிவேப்பிலையை அதிகம் உணவில் எடுத்து கொள்வதன் மூலம் தலைமுடி உதிர்வதை தடுப்பதோடு அடர்த்தியான முடியையும் பெறலாம். கறிவேப்பிலையில் இரும்புசத்து அதிக அளவில் உள்ளது.
 
வாரம் ஒருமுறை குளிப்பதற்கு முன் தயிறை ஒரு அரைமணி நேரம் தலையில் ஊற வைத்து குளிப்பதால் முடிக்கு ஊட்டசத்து கிடைத்து முடி கொட்டுவது  குறையும்.
 
கொத்தமல்லி எளிமையாக கிடைக்கும் ஒரு பொருளாகும். அனைத்து வீடுகளிலும் கட்டாயமாக இருக்கும் ஒரு பொருள். கொத்தமல்லி இலை சாறினை எடுத்து கொண்டு தலையில் தடவி வர முடி கொட்டுவது தடுக்கப்படும்.
 
இளநீர் மற்றும் தேங்காய்ப்பால் கொண்டு தலைமுடியை கழுவுவதன் மூலம் முடி கொட்டுவதில் இருந்து விடுபடலாம்.
 
இளஞ்சூடான எண்ணெய்யை தலையில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம். இதன் மூலம் தலையில் இரத்த ஓட்டம் அதிகமாக பாய்ந்து முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைகின்றன. 
 
முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சை விதை மற்றும் மிளகு சேர்த்து அரைத்து தடவி வர முடி கொட்டுவது நிற்பதோடு புதியதாக முடி வளர்வதற்கும் உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்