சருமத்தினை பொலிவுடன் வைத்துக்கொள்ள உதவும் அழகு குறிப்புகள் !!

Webdunia
பொதுவாக அனைவருமே உருளைக்கிழங்கு சமைக்கும் போது அதன் தோலை சீவி தூக்கி எறிந்துவிடுவர். சீவிய தோலை கொண்டு முகத்தில் பரு உள்ள இடத்திலும், கருவளையம் உள்ள இடத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி விடவும். உருளைக்கிழங்கு தோலை ஃபேஸ் பேக்காக கூட போடலாம். 

அவ்வாறு செய்வதன் மூலம் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து முழுவதுமாக கிடைத்திடும். உருளைக்கிழங்கு தோலை அரைத்து, பேஸ்ட் போல செய்தும்  முகத்தில் தடவலாம். உருளைக்கிழங்கு தோலை சரும பராமரிப்பிற்கு பல்வேறு வகைகளில் பயன்படுத்தலாம்.
 
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால், அவை சருமத்திற்கு ஊட்டமளித்து, சரும செல் பாதிப்பை தவிர்த்திட  உதவுகிறது. 
 
ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு முடித்த பிறகு, அதன் தோலை வெயில் சில நாட்களுக்கு உலர வைத்து எடுத்துக் கொள்ளவும். ஆரஞ்சின் தோல் மொறுமொறுப்பாகும் வரை உலர்த்த வேண்டியது அவசியம்.

காய்ந்த ஆரஞ்சு தோலை பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். தயாரித்த அந்த பவுடரை தயிர் மற்றும் தேன் சேர்த்து பேஷ் பேக்காக போடலாம். 
 
காபி கொட்டையில் மீதமானதை எடுத்து காபி மாஸ்க் அல்லது காபி ஸ்கரப் போன்று பயன்படுத்தலாம். அதற்கு, காபி தூளுடன் சிறிது தேங்காய் எண்ணெய்  மட்டும் சேர்த்துக் கொண்டால் போதுமானது. இவை சருமத்தின் தோலை புதிதாக மாற்றி, இயற்கை பொலிவை தந்து உங்களது அழகை மேம்படுத்திட உதவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்