மணத்தக்காளி கீரையின் அற்புத மருத்துவ பயன்கள் !!

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (13:03 IST)
மணத்தக்காளி கீரையானது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது.


மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் உள்ளுறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் புண்கள் குணமாகும். மணத்தக்காளி கீரையானது இருதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் இவைகளை குணப்படுத்துவதில் சிறந்தது.  ஏனெனில் வயிற்றில் புண் ஏற்பட்டால்தான் வாயில் புண் வருகிறது. இதனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் இரண்டுமே குணமாகிவிடும்.

கீரையை உணவாக சாப்பிட்டால் அன்றைக்கு முழுவதும் சாப்பிட்ட உணவுகளை நன்றாக செரிமானம்  செய்து விடும்.

மலச்சிக்கள், சிறுநீரகக் கோளாறு, சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, இவை அனைத்திற்கும் இந்த கீரை சிறந்த மருந்தாக உள்ளது. இந்த பிரச்சனை இருப்பவர்கள் தினமும் இக்கீரையை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் பிரச்சனை குணமாகும்.

மணத்தக்காளியானது மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிக்கும். கண்பார்வை தெளிவு பெறும். வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது மணத்தக்காளி.

மணத்தக்காளியின் வேரானது மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

மணத்தக்காளி வற்றலானது வாந்தியைப் போக்கி பசியை ஏற்படுத்தும். உடற்சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்து கொண்டால் உடற்சூடு குறையும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்