கொரோனா இரண்டாவது அலையில் யாருக்கு பாதிப்பு அதிகம்? அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (06:40 IST)
கொரோனா இரண்டாவது அலையில் யாருக்கு பாதிப்பு அதிகம்?
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் என் இரண்டாவது அலை பரவி விட்டதாக கூறப்படும் நிலையில் இந்த இரண்டாவது அறையில் யாருக்கு அதிகம் பாதிப்பு என்ற தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கொரோனா முதல் அலையில் பெரும்பாலும் வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே நோயுடையவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர் என்பதும் பலியானார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இரண்டாவது அலையில் பெரும்பாலும் இளைஞர்களும் குழந்தைகளும் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது 
 
இதனால் இரண்டாவது அலையில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இந்த நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நேற்று முதல் தொடங்கி உள்ள நிலையில் குழந்தைகள் மட்டும் இளைஞர்களும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது 
 
குறிப்பாக பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி இளைஞர்கள் இரண்டாவது அலையால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்