பெங்களூர் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பாத்ரூம் ஓட்டை வழியாக பெண்களை ஆபாசமாக படம் எடுத்த வாலிபர் ஒருவனை அங்குள்ள ஊழியர்கள் வசமாக பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
பெங்களூரின் கே.ஆர்.புரத்தை சேர்ந்தவர் பரமேஸ். 25 வயதான இவர் அங்குள்ள தனியார் நிறுவனங்களுக்கு உணவு சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார். அப்படி ஒரு மென்பொருள் நிறுவனத்துக்கு உணவு கொண்ட சென்ற போது அங்குள்ள பெண்கள் பாத்ரூமில் உள்ள எக்ஸ்சாஸ் ஃபேன் மாட்டியிருக்கும் ஓட்டை வழியாக பெண்களை ஆபாசமாக படம் எடுக்க முயற்சி செய்துள்ளான்.
இதனை பார்த்த அந்த நிறுவனத்தில் உள்ள பெண் ஊழியர் ஒருவர் தனது சக ஊழியர்கள் துணையுடன் அந்த வாலிபரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அந்த வாலிபர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 354 பி மற்றும் சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவனை கைது செய்துள்ளனர்.