பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினால் தேசத்துரோக வழக்கு: முதலமைச்சர் எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (09:17 IST)
பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடினால் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படும் என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் நடந்த உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இதனை அடுத்து இந்தியாவில் உள்ள சிலர் பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடிய தகவல்கள் வெளியானது 
 
காஷ்மீரில் ஒரு சில மாணவர்கள் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் இது குறித்து கூறிய போது ’டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடினால் அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பாயும் என்றும் கூறியுள்ளார்
 
மேலும் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய 3 மாணவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்