இந்தியப்பாரம்பரியத்துக்கு 'மதச்சார்பின்மை'தான்மிகப்பெரியஅச்சுறுத்தலாகஉள்ளது என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 'அயோத்தி ஆராய்ச்சி மையம்' சார்பில் ராமாயணம் குறித்துக் கலை களஞ்சியம் மற்றும் புத்தகங்கள் வெளியிடும் நிகழ்வில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் இந்திய பாரம்பரியத்தை உலகளவில் கொண்டு செல்ல மதச்சார்பின்மைதான் பிரச்சனையாக உள்ளது. ராமர் தன்னுடைய தம்பி மகனை தற்போது பாகிஸ்தான் உள்ள பகுதிக்கு அரசராக நியமித்தார். ஆனால் சிலரோ ராமர் அயோத்தியை ஆட்சி செய்தாரா என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் வரலாற்றை யாராலும் மறுக்க முடியாது எனக் கூறியுள்ளார்.