இஷ்க் படத்தின் தெலுங்கு ரீமேக்.. பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

திங்கள், 8 மார்ச் 2021 (11:11 IST)
மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற இஷ்க் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.

அனுராஜ் மனோகர் இயக்கத்தில் ஷான் நிகம், அனு ஷீத்தல் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படம் இஷ்க். இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் மற்ற மொழிகளில் ரீமேக் உரிமை வாங்கப்பட்டது. இப்போது தெலுங்கில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தெலுங்கு பதிப்பில் தேஜா சஜா நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியா வாரியர்  நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை எஸ்.எஸ்.ராஜு இயக்க உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்