மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தன்னுடன் உடலுறவு வைத்துக்கொண்டால் மோட்சம் கிடைக்கும் என அங்கு வரும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட யோகா குரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை சேவ்ரி பகுதியை சேர்ந்த 57 வயதான ஷிவ்ராம் ராவத் என்பவர் யோகா வகுப்பு நடத்தி வருகிறார். இவர் ஞாயிறு தோறும் யோகா வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். அப்போது ஒரு பெண்ணிடம் இவர் தன்னுடன் உடலுறவு வைத்துக்கொண்டால் மோட்சம் கிட்டும் என கூறி தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
மேலும் அந்த பெண்ணிடம் அநாகரிகமான முறையிலும் நடந்து வந்துள்ளார் இந்த யோகா குரு. இதனையடுத்து அந்த பெண் தனது கணவருடன் சேர்ந்து யோகா குரு மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 6 வருடங்களாக யோகா வகுப்புகள் நடத்தி வரும் இவர் பல பெண்களை இப்படி பாலியல் தொந்தரவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த பெண் தற்போது புகார் அளித்த பின்னர் மேலும் 3 முதல் 4 பெண்கள் இந்த யோகா குரு மீது புகார் கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
யோகா குரு ஷிவ்ராம் ராவத் மீது பாலியல் புகார் எழுந்ததை அடுத்து நேற்று இரவு அவரது வீட்டில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.