முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை – கர்நாடகாவில் அதிர்ச்சி!
வெள்ளி, 28 ஜனவரி 2022 (14:35 IST)
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் முன்னாள் முதல்வராக இருந்தவர் எடியூரப்பா. இவரது பேத்தி சவுந்தர்யா மருத்துவம் படித்தவர். பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார் சவுந்தர்யா. இவருக்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாக திருமணமான நிலையில் ஒரு குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் இன்று சவுந்தர்யா தற்கொலை செய்து கொண்ட செய்தி கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூர் விரைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.