மோடியிடம் பேச சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலநிலை: வைரல் வீடியோ!!

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2017 (13:12 IST)
குஜராத்தில் உள்ள காந்தி நகரில் விருது வழங்கும் விழா ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டார்.


 
 
மகளிர் தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள காந்தி நகரில் பெண் பஞ்சாயத்துத் தலைவர்களை கௌரவித்து விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். 
 
அப்போது ஷாலினி சிங் என்னும் பெண், மத்திய அரசு அறிவிக்கும் நலத் திட்டங்களை மாநில அரசு முறையாக வழங்குவதில்லை என்று மேடை அருகே சென்று கூச்சலிட்டார். 
 
உடனே, அந்தப் பெண்ணைப் பேசவிடாமல் பாதுகாப்பு அதிகாரிகள் இழுத்துச் சென்றனர். இந்தக் காட்சி வீடியோவாக பதிவாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.
 

நன்றி:10 TV
அடுத்த கட்டுரையில்