17 வயது சிறுவனுடன் உறவு ; லாட்ஜில் பிடிபட்ட தொழிலதிபர் மனைவி

Webdunia
சனி, 18 நவம்பர் 2017 (15:31 IST)
பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரின் மனைவி, 17 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


 

 
கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியியில் வசிக்கும் ஒரு நபர், அந்த பகுதியில் தண்ணீர் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அந்நிலையில், கடந்த மாதம் 24ம் தேதி அந்த பெண் காணாமல் போய்விட்டார்.
 
தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு அப்பெண்ணின் கணவர் புகார் அளித்திருந்தார். போலீசார் அதுபற்றிய விசாரணையில் ஈடுபட்டிருந்த போது, அதே பகுதியில் உள்ள ஒரு நபர் தனது 17 வயது மகனை காணவில்லை என புகார் அளிக்க வந்தார்.
 
அப்போது, காவல் நிலையத்தில் அப்பெண்ணின் புகைப்படத்தை பார்த்து அதுபற்றி விசாரித்தார். அப்போதுதான், அப்பெண் தன்னுடைய மகனுடன் தொடர்பில் இருப்பதாக சிலர் கூறியது அவருக்கு நினைவில் வர அதுபற்றி அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
 
இதையடுத்து, சுதாரித்த போலீசார் அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கினார். அதில், வேளாங்கன்னியில் உள்ள ஒரு விடுதியில் அவர்கள் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனையில் செய்யப்பட்ட சோதனையில் அந்த பெண்ணும், சிறுவனும் உடல் ரீதியான உறவு வைத்தது தெரியவந்தது. எனவே, சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 
ஆனால், அதை ஏற்க மறுத்த அந்த பெண், நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் எனக் கூறி வருகிறார். 
 
என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் முழித்து வருகிறார்களாம்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்