இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து சென்னை வந்த பெண்ணுக்கு ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது. சென்னை விமான நிலையம் வந்து அங்கிருந்து ஆந்திராவில் உள்ள திருப்பதிக்கு சென்ற 39 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பெண்ணின் குடும்பத்தினர் 6 பேருக்கு நடத்திய சோதனையில் கொரோனா இல்லை என தெரிய வந்துள்ளது. இதனால் ஆந்திராவில் ஒமிக்ரான் பாதிப்பு 2 ஆக உயர்ந்துள்ளது.