செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி என்ற பகுதியில் நடிகர் மம்மூட்டிக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. ஆனால் இதை மழைநீர் வடிகால் செல்லும் கழுவேலி புறம்போக்கு நிலம் என சொல்லி நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை எதிர்த்து மம்மூட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது விசாரணையில் நீதிபதிகள் தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் செப்டம்பர் 27 ஆம் தேதிக்குள் இது சம்மந்தமாக தமிழக அரசு பதிலளிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.