கணவரின் கிட்னியை 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த மனைவி, தனது பேஸ்புக் காதலனுடன் ஓடி விட்டதாக கூறப்படும் சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள பெண் ஒருவர், தனது குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டி கணவனின் சிறுநீரகத்தை விற்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளார். மகளின் திருமணம் மற்றும் குடும்ப பொருளாதார நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கணவனும் வேறு வழியில்லாமல் சிறுநீரகத்தை விற்பனை செய்ய ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு கணவர் 10 லட்ச ரூபாய்க்கு சிறுநீரகத்தை விற்றார். இதையடுத்து, அவருடைய மனைவி சிறுநீரகம் விற்ற 10 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு தனது பேஸ்புக் காதலனுடன் ஓடிவிட்டார்.
பின்னர், பராக்கூர் என்ற பகுதியில் தனது மனைவி கள்ளக்காதலருடன் வசித்து வருவதை கணவர் அறிந்தார். அங்கு சென்று கேட்டபோது, "உன்னை விவாகரத்து செய்து விடப் போகிறேன்" என்று மனைவி கூறியுள்ளார்.
இதையடுத்து, கணவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.