காதலனை கணவனாக மாற்ற; கணவனை எரித்து கொன்ற பெண்!!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (20:49 IST)
ஆந்திராவில் பெண் ஒருவர் தனது காதலருடன் வாழ்வதற்காக தனது கணவரை எரித்து கொன்ற சம்பவம் மற்றும் அதன் பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சுவாதி ரெட்டி என்பவருக்கு சுதாகர் என்பவரோடு திருமணம் நடந்தது. ஆனால், இவருக்கு ராஜேஷ் என்பவருடன் காதல் இருந்துள்ளது. இதனால், தன் காதலரோடு வாழ வேண்டும் என்பதற்காக இவர் திட்டம் தீட்டி நடத்திய காரியங்கள் அதிர்ச்சியை அளிக்கிறது. 
 
கணவரை, காதலரோடு சேர்ந்து கொன்றுவிட்டு பின்னர் காதலர் முகத்தில் ஆசிட் வீசி அவருக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். பின்னர், மாமனார் வீட்டில் சுதாகர் விபத்தில் சிக்கியதாகவும் அதனால் அவரது முகத்தில் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
மாமனார் வீட்டில் இருப்பவர்களும் இதை நம்பியுள்ளனர். இதன் பின்னர் தன் காதலருடன்  பிரச்சனை ஏதுமின்றி வாழ்ந்துள்ளார். இந்நிலையில், காதலர் ராஜேசின் நடவடிக்கைகள் சுதாகரோடு ஒத்துபோகாததால் வீட்டில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
இதனால், இதுகுறித்து கேள்வி எழுப்பியது போது மழுப்பலான ராஜேஷ் பதில் அளித்துள்ளார். எனவே, சந்தேகத்தில் மாமனார் வீட்டார் போலீஸில் புகார் அளித்துள்ளனர். பின்னர், போலீஸார் ராகேஷை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
 
சுதாகரின் ஆதார் அடையளங்கள் மூலம் ராஜேஷை சோதனை செய்துள்ளனர். ஆனால், இவை அனைத்தும் ஒத்துபோகவில்லை. இதன் பின்னர் சுதாரித்துக்கொண்ட போலீஸார் அதிரடி விசாரணையில் ஈடுபட்ட பின் உண்மை வெளிவந்துள்ளது. தற்போது போலீஸார் ராஜேஷ் மற்றும் சுமதி ரெட்டியை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்