வெளிநாட்டில் இருந்து வந்த கணவனை வீட்டுக்குள்ளேயே விடாத மனைவி – பிறகு நடந்த சோகம்!

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (11:37 IST)
வெளிநாட்டில் இருந்து தனது வீட்டுக்கு வந்த கணவனை மனைவி கொரோனா அச்சம் காரணமாக வீட்டுக்குள்ளே அனுமதிக்காக நிகழ்வு கேரளாவில் நடந்துள்ளது.

கொரோனா காரணமாக பலரும் வெளிநாடுகளில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். அப்படி வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டே அனுப்பப் படுகின்றனர். பாஸ்கரன் என்பவர் அமெரிக்காவில் இருந்து கேரளாவின் வெள்ளிமலையில் உள்ள தனது மனைவி வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அவரின் மனைவியோ கணவருக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் கதவை திறக்க மறுத்துள்ளார். குழந்தைகளையும் வெளியே அனுப்பவில்லை.

கேட்டுக்கு வெளியே இருந்தபடியே பல மணிநேரமாக தான் சோதனைகளை மேற்கொண்டுதான் வந்துள்ளேன் என அவர் கெஞ்சியபோதும் மனைவி உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த பகுதி மக்களும் கணவருக்கு ஆதரவாக பேசினாலும், அவர் மனைவி இறங்கி வரவில்லை. இதனால் வேறு வழியின்றி அப்பகுதி வீட்டின் கேட்டை உடைத்து காரை எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊரான மதுரைக்கு கிளம்பியுள்ளார் பாஸ்கரன். இந்த சம்பவமானது சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்