சபரிமலைக்கு பெண்களை அழைத்து வரமாட்டோம்: குருசாமிகள் உறுதி

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (21:50 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இருப்பினும் இந்த தீர்ப்பை பெரும்பாலான ஐயப்ப பக்தர்களும், தேவஸ்தானமும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவேதான் கடந்த மாதம் சபரிமலையில் நடை திறக்கப்பட்டபோது ஒரு பெண் கூட சன்னிதானத்திற்குள் நுழைய முடியவில்லை

இந்த நிலையில் வரும் 17ஆம் தேதி மீண்டும் சபரிமலையில் நடைதிறக்கப்படவுள்ளது. சபரிமலைக்கு செல்லும் கன்னிச்சாமிகள் குருசாமியின் உதவியுடன் தான் முதன்முதலில் சபரிமலைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு விரதம் இருந்து செல்லும் பெண்கள் நிச்சயம் ஒரு குருசாமியின் வழிகாட்டுதலின்பேரில்தான் செல்ல வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் மரபுகளை மீறி குறிப்பிட்ட வயதுள்ள பெண்கள் யாரையும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அழைத்து வரமாட்டோம் என குருசாமிகள் உறுதிமொழி அளித்துள்ளதாக அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் தெரிவித்துள்ளது. குருசாமிகளின் இந்த உறுதிமொழியால் சபரிமலைக்கு பெண்கள் செல்வதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்