ஆபாசப் படங்கள் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் இல்லை! – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (10:17 IST)
ஆபாசப் படங்களை பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் இல்லை என கேரள உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.



தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த காலக்கட்டத்தில் பலரிடமும் ஸ்மார்ட்போன்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் வளர்ச்சி ஒரு வகையில் ஆபாசப்படங்கள் மற்றும் வீடியோக்களின் அபரிமிதமான வளர்ச்சிக்கும் மறைமுகமாக உதவியாக இருக்கிறது. இந்திய அரசு ஆபாசப்பட தளங்கள் பலவற்றை முடக்கியுள்ள போதிலும் பலர் விபிஎன் போன்றவற்றை பயன்படுத்தி அந்த தளங்களை நாடுகின்றனர். இந்த மாதிரியான படங்களை பார்ப்பது குற்றமா? இல்லையா? என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.

சமீபத்தில் நள்ளிரவில் சாலையோரம் அமர்ந்து ஆபாசப்படம் பார்த்த ஒருவரை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் கருத்து தெரிவித்துள்ள நீதிமன்றம் “ஒருவர் தனிமையில் அமர்ந்து ஆபாசப்படம் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் கிடையாது. அத்தகைய படங்களை விற்பது, ஷேர் செய்வது மற்றும் பொதுவெளியில் திரையிடுவது ஆகியவை தண்டனைக்குரிய குற்றம் ஆகும்” என கூறி படம் பார்த்தவர் மீதான வழக்கை ரத்து செய்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்