போர்களால் உணவே கிடைக்காத சூழல் ஏற்படப்போகிறது! - ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி எச்சரிக்கை!

Prasanth Karthick
செவ்வாய், 19 நவம்பர் 2024 (09:29 IST)

பிரேசிலில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, போர்களால் ஏற்படப்போகும் ஆபத்துகள் குறித்து பேசியுள்ளார்.

 

 

ஜி20 உச்சி மாநாடு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், சீனா, ஜெர்மனி என பல நாடுகளை சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டுள்ள நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துக் கொண்டுள்ளார்.

 

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, பட்டினி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம் குறித்த தலைப்பில் பேசியுள்ளார். அப்போது அவர் “உலகில் நடைபெறும் போர்களால் தெற்கு நாடுகளில் உணவு, எரிபொருள், உரம் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தெற்கு நாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து அந்நாடுகள் சந்திக்கும் சவால்களை மனதில் வைத்து செயல்பட்டால் மட்டுமே நமது ஆலோசனைகள் வெற்றிபெறும்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்