பெண்களை பகலில் வணங்கி, இரவில் வன்கொடுமை செய்வோம்!? – நகைச்சுவை நடிகர் பேச்சால் சர்ச்சை!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (17:39 IST)
அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகர் ஒருவர் இந்தியா குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஜான் எப் கென்னடி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நகைச்சுவை நடிகர் வீர் தாஸ் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர் “நான் இரண்டு இந்தியாவில் இருந்து வந்துள்ளேன். கொரோனாவுக்கு எதிரான போர், பாலியல் பலாத்கார சம்பவங்கள், நடிகர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை, விவசாயிகள் போராட்டங்கள் போன்ற பல பிரச்னைகளை இந்தியா எதிர்கொண்டுள்ளது.

அதேநேரம் நாங்கள் பெண்களை பகலில் வணங்குகிறோம்; இரவில் அவர்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்கிறோம். எங்கள் தேசத்தில் ஒளியும், இருளும், நன்மையும் தீமையும் உள்ளன. இவற்றில் எதுவும் ரகசியம் இல்லை. எனவே மக்களை சிறந்தவர்களாக உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். மக்களிடையே அன்பை பரப்புங்கள்” என்று பேசியுள்ளார். இந்தியா குறித்து வேறு ஒரு நாட்டில் பாலிவுட் நடிகர் ஒருவர் இழிவாக பேசியுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து டெல்லி காவல் நிலையத்தில் வீர் தாசுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு பிறகு வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்