கல்யாண கோலத்தில் காதலி; காதலன் செய்த கொடூரம்..! – உத்தர பிரதேசத்தில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (15:02 IST)
உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் காதலனை விடுத்து வேறு ஒருவரை திருமணம் செய்ததால் காதலன் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மதுரா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இளம்பெண் வீட்டில் நிச்சயித்த இளைஞனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்ததாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் தனது காதலி தன்னை விட்டு போய் விட்டதாக தனது நண்பர்களிடம் புலம்பிக் கொண்டிருந்திருக்கிறார்.

பின்னர் கைத்துப்பாக்கி ஒன்றுடன் திருமணம் நடந்த இடத்திற்கு சென்ற அந்த இளைஞர், மணமகள் அறையில் இருந்த இளம்பெண்ணை சரமாரியாக சுட்டுள்ளார். இதனால் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து இளைஞரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்