ஆதார் மூலம் தொடரும் கொள்ளை; இணை நிதியமைச்சர் அறிக்கை

Webdunia
வியாழன், 8 பிப்ரவரி 2018 (16:38 IST)
வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் தகவல்களை கொண்டு வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து வங்கி ஊழியர்கள் பணத்தை திருடியுள்ளனர்.

 
மத்திய இணை நிதியமைச்சர் ராஜ்யசபாவில் தாக்கல் செய்த அறிக்கையில், பொதுத்துறை வங்கிகள் அளித்துள்ள புள்ளிவிவரத்தின்படி சில வங்கிகளில் வாடிக்கையாளர்களின் பணம் ஆதார் தகவல்கள் மூலம் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  
 
அண்மையில் பொதுத்துறை வங்கிகளான அலகாபாத் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி மத்திய அரசுக்கு ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், சுமார் ரூ.1.42 கோடி அளவிலான பணம் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ஆதார் தகவல்களை பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆதாரை வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் இணைப்பதை கட்டாயமாக்குவது குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மத்திய அரசு சலுகைகள் மற்றும் பிற சேவைகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தி வருகிறது. 
 
இந்நிலையில் பொதுத்துறை வங்கிகள் இதுபோன்ற தகவல்கள் வெளியிட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்