சமூக விலகலை கடைபிடித்து மத்திய அமைச்சரவை கூட்டம் !

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (13:38 IST)
சமூக விலகலை கடைபிடித்து மத்திய அமைச்சரவை கூட்டம் !

நேற்று இரவு 8 மணிக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு மக்கள் ஊரடங்கை கடை பிடிக்க வேண்டும் என தெரிவித்தார். ஊரடங்கின் மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம் என இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார். 

இதனையடுத்து, நேற்று நள்ளிரவு முதல் அடுத்த மூன்று வாரங்களுக்கு இந்த கொரோனா பாதிப்பில்  இருந்து மக்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள  ஊரடங்கு உத்தரவை கடைப்பிக்க வேண்டும்;சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்  என அனைத்து மாநிலங்களும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 இந்த நிலையில்,  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கொரோனா பாதிப்பு, ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பாதிக்காத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக விலகலை கடைப்பிடித்து சிறுது தூரத்தில் தள்ளி உட்கார்து  ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்