மச்சினிச்சி மீது கோபம் : துப்பாக்கியால் சுட்டு நடிகர் தற்கொலை

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2016 (10:36 IST)
தொலைக்காட்சி சீரியல் நடிகர் கமலேஷ் பாண்டே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கிரைம் பாட்ரோல் எனும் க்ரைம் தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்து பிரபலமானவர் கமலேஷ் பாண்டே. 
 
இவருக்கு இரண்டு பெண்கள் உள்ளனர். அதில் முதல் பெண்ணின் திருமணத்தை, இவருடை மனைவியின் சகோதரி அஞ்சானி சதுர்வேதி, அவருக்கு தெரியமாலேயே நடத்தி முடித்துள்ளார்.
 
இதனால் கோபமடைந்த கமலேஷ் நேற்று இரவு மத்திய பிரதேசம் ஜபால்பூரில் உள்ள அஞ்சானியின் வீட்டிற்கு சென்று சண்டை போட்டுள்ளார். அப்போது அவர் தன் வசம் ஒரு கைதுப்பாக்கியும் வைத்திருந்தார்.  அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.
 
அந்த துப்பாக்கியின் மூலம் கையை உயர்த்தி மேலே சுட்டுள்ளார். அதன் பின் தனது மார்பை நோக்கியும் சுட்டுள்ளார். அவரின் உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் அவர் மரணமடைந்து  விட்டார்.
 
அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
அடுத்த கட்டுரையில்