இறந்த மனைவியை குப்பையால் எரித்த கணவர்!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (06:09 IST)
மத்தியப்பிரேதச மாநிலம் நீமச்சலில் ஒருவர் தன்னுடைய மணைவியை சுடுகாட்டில் எரிக்க பணம் இல்லாததால் குப்பைகளை வைத்து எரித்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
இறந்த மனைவியை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால் தோளில் சுமந்து சென்ற கணவர், உடல் நலம் பாதிக்கப்பட்ட மகனை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால் சுமந்து சென்ற தந்தை போன்ற சில சிம்பவங்கள் சில நாட்களாக ஊடகங்களில் வந்தவாறே உள்ளன.
 
இந்நிலையில், நீமச்சில் உள்ள பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்த தனது மனைவியை எரிக்க பணம் இல்லாததால், குப்பைகளை போட்டு எரித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
 
ஜகதீஷ் என்னும் அந்த நபர் கூறுகையில், எனது மனைவியை எரிக்க பணம் இல்லாததால், அங்குள்ள நகராட்சி அதிகாரிகள், பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு அதிகாரியை பார்க்க சொன்னார்கள். ஆனால் அவரும் பணம் இல்லை என மறுத்துவிட்டார்.
 
இதனால், அங்குள்ள மரக்கட்டைகள், பலிதீன், ரப்பர் போன்றவற்றை எடுத்து சென்று எனது மனைவியை எரித்தேன். சில எனது மனைவியை ஆற்றில் வீசிவிட சொன்னார்கள் என ஜகதீஷ் கூறினார்.
அடுத்த கட்டுரையில்