சீனாவில் பள்ளி மாணவி ஒருவரை பலாத்காரம் செய்த ஆசிரியர் ஒருவரை மாணவியின் பெற்றோரும், பொதுமக்களும் நிர்வாணமாக்கி அடித்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஹெபெய் மாகாணத்தை சேர்ந்த ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் லீ. இவர் சமீபத்தில் மாணவியை ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
ஆசிரியர் மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் அனைவருக்கும் தெரியவர, அந்த ஆசிரியரை மாணவியின் பெற்றோர் தெருவுக்கு இழுத்து வந்து நிர்வாணமாக்கி அடித்து, உதைத்துள்ளனர்.
மேலும் அந்த வழியாக வந்தவர்களையும் அழைத்து ஆசிரியரை அடிக்க வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல் முழுவதும் பயங்கர காயங்களுடன் ஆசிரியர் லீயை மீடனர்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த பின்னர் லீயை காவல்துறையினர் சிறையில் அடைத்த்தனர். பள்ளிக் கல்வித்துறையும் அவரை பணியிடைநீக்கம் செய்துள்ளது.