ஹேமந்த் சோரன் பதவி விலகிய நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் இன்று பதவி ஏற்று கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் ஆட்சி நடைப்பெற்று வருகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான ஹேமந்த் சோரன் அம்மாநில முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். இதற்கிடையே நில சுரங்க முறைகேடு வழக்கை விசாரித்து வந்த அமலாக்கத்துறை, அவ்வழக்கில் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனை கைது செய்தது.
அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனின் பெயர் அக்கட்சி நிர்வாகிகளால் முன்மொழியப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தன்வசம் வைத்திருந்த ஜே.எம்.எம் கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் அடுத்த முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.