90 கண்டெய்னர்களுடன் காணாமல் போன ரயில்.. அதிர்ச்சியில் ரயில்வே அதிகாரிகள்..!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (17:02 IST)
90 கண்டெய்னர்களுடன் காணாமல் போன ரயில்.. அதிர்ச்சியில் ரயில்வே அதிகாரிகள்..!
90 கண்டெய்னர்களுடன் துறைமுகம் நோக்கி சென்ற ரயில் ஒன்று திடீரென காணாமல் போன சம்பவம் ரயில்வே அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 
 
பிப்ரவரி ஒன்றாம் தேதி 90 கண்டெய்னர்களுடன் சரக்கு ரயில் ஒன்று நாக்பூரிலிருந்து மும்பைக்கு புறப்பட்டது. மும்பையில் உள்ள ஜவகர்லால் நேரு துறைமுகத்திற்கு ஐந்து நாட்களில் போய் சேர வேண்டிய இந்த ரயில் 12 நாட்கள் ஆகியும் குறிப்பிட்ட இடத்திற்கு வரவில்லை என்றவுடன் அந்த ரயிலை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் இருந்தனர். 
 
கடைசியாக அந்த ரயில் கசரா என்ற ரயில் நிலையத்திற்கு வந்திருப்பதாகவும் அதன் பிறகு காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. 90 கண்டெய்னர்களுடன் ரயில் காணாமல் போனது எப்படி என்ற ஆச்சரியத்தில் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். 
 
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் இன்ஜினுக்கும்,  ரயில்வே அலுவலகத்துக்கும் இடையே உள்ள தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ரயிலை கண்டறிய கடுமையாக தேடி வருகிறோம் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்