பிரயாக்ராஜ் கும்பமேளாவில் ஏற்பட்ட தீடீர் கூட்ட நெரிசல்: 15 பேர் பரிதாப பலி..!

Siva

புதன், 29 ஜனவரி 2025 (07:50 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்ற நகரில், கடந்த சில நாட்களாக மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில், நேற்று திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பரிதாபகரமாக பலியானதாகவும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்களில் பெரும்பாலும் பெண்கள் என்று கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மவுனி அமாவாசை என்பதால், புனித நீராட ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் குவிந்ததாகவும், இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தான் இந்த சோகம் நடந்திருப்பதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கடந்த சில நாட்களாக, மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புனித நீராட லட்சக்கணக்கானோர் திரண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கங்கை, யமுனா, சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடுவதை முக்கியமாகக் கருதி வரும் நிலையில், இந்த சோகம் நடந்துள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன், உடனடியாக தொலைபேசி மூலம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அழைத்து, உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் குறித்து, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சரோஜினி என்பவர் கூறிய போது, "நாங்கள் இரண்டு பேருந்துகளில் 60 பேர் கொண்ட குழுவில் வந்திருந்தோம். எங்கள் குழுவில் ஒன்பது பேர் திடீரென சிலரால் தள்ளப்பட்ட போது, நாங்கள் நடுவில் சிக்கிக் கொண்டோம். எங்களில் சிலர் கீழே விழுந்து, காப்பாற்ற முடியாத நிலையில் இருந்தோம்" என்று கூறிக் கொண்டே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
  
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்