சிறுமியை பலாத்காரம் செய்த டிக்டாக் பிரபலம் கைது! – ஆந்திராவில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (13:17 IST)
ஆந்திராவில் பிரபல டிக்டாக் பிரபலமாக இருக்கும் பார்கவ் என்ற நபர் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் பார்கவ். டிக்டாக் பிரபலமான இவர் ஃபன் பக்கெட் என்ற யூட்யூப் சேனலையும் நடத்தி வந்துள்ளார். இவரது வீடியோக்களை பார்த்து இவருக்கு ரசிகையான 14 வய்து சிறுமி ஒருவர் இவருடன் பழகி வந்துள்ளார். பார்கவ் வீட்டிற்கு அருகே உள்ள காலணியை சேர்ந்த சிறுமி என்பதால் அடிக்கடி பார்கவின் வீடியோக்களிலும் இவர் சில சமயங்களில் வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் விசாரித்தபோது டிக்டாக் பிரபலம் பார்கவ் தன்னிடம் பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக சிறுமி கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் பார்கவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்