இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் அவருக்கு ரூ.50 ஆயிரம் பணத்தை மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்த சம்பவம் குறித்து பேசிய மயூர் ஷெல்கே “பார்வையற்ற தாயுடன் சென்ற குழந்தை தண்டவாளத்தில் விழுவதை பார்த்தேன். நான் அவர்களிடமிருந்து 60 மீட்டர் தொலைவில் இருந்தேன். அந்த குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட நினைத்தேன். ஒருவரை காப்பாற்றினேன் என்பதை சில வினாடிகளுக்கு என்னால் உணர முடியவில்லை” என்று கூறியுள்ளார்.